ஜனவரி மாதம் 2 ஆம் தேதி “ஈஸ்வரன்” இசை வெளியீடு

நடிகர் சிம்பு நடித்து மாபெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள திரைப்படம் ஈஸ்வரன்.  வழக்கமாக சிம்புவின் படங்கள் வெகுநாட்கள் எடுக்கப்படும் என்னும் பெயரை மாற்றி இந்த படம் மிகக் குறைவான நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த  படத்தின் இயக்குநர் சுசீந்திரன் ஆவார்.  ஈஸ்வரன்  படத்துக்கு இசையமைப்பாளர் தமன் ஆவார்.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிம்புவின் தோற்றம் என வெ:ளியான எல்லாமே ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது.  இப்படத்தின் இசை வேலை கள் முடிந்துள்ளன.

இதையொட்டி வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.  இசையமைப்பாளர் தமன் தனது திரைப்பட வரலாற்றில் மிகக் குறைவான நாட்கள் இசையமைத்த இரண்டாம் படம் ஈஸ்வரன் என தெரிவித்துள்ளார்.