யு எஸ் : விமானத்தில் லாப்டாப் எடுத்துச் செல்ல அனுமதி

--

புதாபி

விமானத்தில் லாப்டாப் போன்ற சாதனங்கள் கேபின் லக்கேஜ் ஆக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா விலக்கிக்கொண்டதாக எதிஹாட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக லாப்டாப், டேப்லட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் கேபினில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்திருந்தது.   தற்போது விமான நிலையங்களில் சரியாக பரிசோதிக்கப் பட்டால் அவைகளை எடுத்துச் செல்ல தடை எதுவும் இல்லை என அறிவித்துள்ளது

எதிஹாட் விமானத்தில் அமெரிக்காவுக்கு பயணிப்போர், இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் ஆகிய இரு இடங்களிலும் முழுமையாக சோதித்த பின்பே அனுமதிக்கப்படுவார்கள் என எதிஹாட் விமான நிறுவனம் உறுதி அளித்துள்ளது.