2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்

புரூசெல்ஸ்

ரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் காணப்பட்டது.   அதன்பிறகு படிப்படியாகக் குறைந்து தற்போது மீண்டும் இரண்டாம் அலை தொடங்கி உள்ளது  பல நாடுகளில் தீவிர பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தடுப்பூசி கண்டறியப்படவில்லை.   ஆயினும் பல தடுப்பூசிகள் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளதால் அவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களுக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.   முதல் கட்டமாக மூன்று நிறுவனங்களிடம் இருந்து 450 கோடி மக்கள் வசிக்கும் 27 நாடுகளின் அமைப்பு 100 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய உள்ளது.

இதைத் தவிர மற்ற நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.   எனவே ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு சுகாதார அதிகாரி ஒருவர் தடுப்பூசிகள் தற்போது போதுமான அளவு இருக்காது என அறிவித்துள்ளார்.  இந்த நிலை வரும் 2021 வரை தொடரும் எனவும் 2022 வரை தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் எனவும் எச்சரித்துள்ளார்.