கொரோனா பரவல் – ஐரோப்பிய நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள்!

பெர்லின்: உலகளவில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 3 கோடிகளைத் தாண்டியுள்ள நிலையில், அந்த வைரஸ் பரவலைத் தடுக்க, ஐரோப்பிய நாடுகள் புதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

கடந்த வாரத்தில், ஒரே நாளில் ஐரோப்பாவில் 54,000 புதிய தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, உலக சுகாதார அமைப்பிடமிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, அந்த வைரஸ் பரவலின் வீரியத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட  காலம் முதல், இதுவரையான நாளில் மட்டும், ஐரோப்பாவில் 50 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதோடு, 22,8000 பேர் அந்த வைரஸால் மரணித்துள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலைக்கான அபாய மணி அடிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கண்டத்து நாடுகளின் அரசுகளால், பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன.