பிரிவினை மற்றும் திமிர் வாதம் பேசுபவர் : ஐரோப்பிய இந்தியர்கள் தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிர்ப்பு

டில்லி

பாஜகவின் இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யா பிரிவினை மற்றும் திமிர் வாதம் பேசுவதாக ஐரோப்பா வாழ் இந்தியர்கள் அவர் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூர் தெற்கு மக்களவை தொகுதியின் உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.  கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் டிவிட்டரில் அரேபியாவில் வாழும் இஸ்லாமியப் பெண்கள் உடலுறவில் உச்சம் அடைவதில்லை எனவும் அவர்கள் ஆண்களின் காமத்துக்காக மகப்பேறு அடைவதாகவும் பதிந்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அவருடைய டிவீட் நீக்கபடது.  ஆனால் சமீபத்தில் இவர் பாஜகவின இளைஞர் அணித் தலைவராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் ஹம்பர்கில் நடத்தும் ஒரு கருத்தரங்கில் கலந்துக் கொள்ளும் 10 பேர் கொண்ட குழுவில் தேஜஸ்வி சூர்யாவையும் சேர்த்துள்ளது.

இதற்கு ஐரோப்பா வாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பெல்ஜியம், உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இது குறித்து ஜெர்மனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி பிரிவினை மற்றும் பிரிவினை வாதம் பேசுபவர்.  அவர் கருத்துக்கள சிறுபான்மை இனத்தவருக்கு எதிரானவை.

 இந்து மத ஆதரவாளரான தேஜஸ்வி சூர்யாவுக்குப் பேச வாய்ப்பளித்ததைப் போல் மற்ற இனத்தவருக்கும் பேச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அப்போதுதான் தூதரகம் ஒரு மதச்சார்பற்ற நிலையை கடைப்பிடிப்பதாகக் கூற முடியும்.   சூர்யா ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் ஜெர்மனி அவரைப் போன்றோரை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது” என் தெரிவித்துள்ளனர்.