விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போட்ட ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி!

லண்டன்: விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, கிளீயர் ஸ்பேஸ் எனும் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன், 102 டாலர் மில்லியன் மதிப்பிற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி.

விண்வெளியில், பல்லாண்டு கால மனித நடவடிக்கைகளால், ஏராளமான செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் பாகங்கள் விண்வெளியில் மிதந்து வருவதால், அங்கே நிறைய குப்பைகள் சேர்ந்துள்ளன. இதுதவிர, தொழில்நுட்பக் குப்பைகளும் சேர்ந்துள்ளன.

இந்தக் குப்பைகளால், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நேரும் என்ற எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குப்பைகளை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காகவே 2025ம் ஆண்டு, ஒரு பிரத்தியேக ஸ்பேஸ்கிராஃப்ட் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ள இத்தகைய முதல் முயற்சியால், புவியின் வட்டப்பாதை சுத்தமாகும் என்று நம்பப்படுகிறது.