பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகள் – பட்டியல் தயாரிக்கும் ஐரோப்பிய யூனியன்!

மேட்ரிட்: கொரோனா பரவல் சமயத்தில், பாதுகாப்பான முறையில் பயணம் செய்யத்தக்க நாடுகளின் பட்டியலை ஐரோப்பிய யூனியன் தயார் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், பாதுகாப்பாக பயணம் செய்யத்தக்க நாடுகளின் பட்டியல் நாளையே தயார்செய்யப்படும் என்று கூறியுள்ளார் ஸ்பெயின் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆரன்ச்சா கோன்ஸலேஸ்.

பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையிலான 15 நாடுகளின் பட்டியலை ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தயார்செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. நோய்தொற்றியல் வகைப்பாட்டின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயார்செய்யப்பட்டு வருவதாக உள்ளூர் வானொலியில் பேசிய ஆரன்ச்சா கோன்ஸலேஸ் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக, கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டமும் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி