அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தி ஐரோப்பிய யூனியனும் பதிலடி

ப்ருசெல்ஸ்:

அமெரிக்க பொருட்களுக்கு ஐரோப்பிய யூனியனும் வரி விதிப்பை உயர்த்தி பதிலிடி கொடுத்துள்ளது.

சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கான கலால் வரியை அமெரிக்க அரசு சமீபத்தில் உயர்த்தி அறிவித்தது. உலக நாடுகள் மீது அமெரிக்கா வர்த்தக போரை தொடங்கியிருப்பதாக பல நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு கலால் வரியை உயர்த்தி பதிலடி கொடுத்தது. இந்த வகையில் ஐரோப்பியா யூனியனும் அமெரிக்கா பொருட்களுக்கு வரியை உயர்த்தி பழி தீர்த்துள்ளது.

மக்காசோளம், ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அமெரிக்க பொருட்களுக்கான வரியை உயர்த்தி அமெரிக்காவுடன் வர்த்தக போரை ஐரோப்பியா யூனியன் தொடங்கியுள்ளது. இது வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என்று ஐரோப்பியா யூனியன் அரசு நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியனில் உள்ள 500 கோடி மக்களும் இந்த விலை உயர்வை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சூப்பர் மார்க்கெட் முதல் தொழிற்சாலைகளில் உள்ள அமெரிக்க பொருட்களுக்கு இந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுமார் 200.8 கோடி யூரோ மதிப்பிலான வரி விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா யூனியனின் இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு டிரம்ப் அரசு வரியை உயர்த்தியதால் இந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக பதற்றத்தால் உலக பங்கு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.