சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் இந்தி நடிகை கங்கனா, இதனால் பல வழக்குகளை எதிர் கொண்டுள்ளார்.

தேசத்துரோக வழக்கில் மும்பையில் உள்ள பந்த்ரா காவல் நிலையத்தில் நேற்று கூட அவர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், கங்கனா, தான் சித்ரவதை செய்யப்படுவதாக உருக்கமாக புலம்பி தீர்த்து விட்டார்.

“விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன் என்பதால் எனக்கு எதிராக வரிசையாக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன” என குறிப்பிட்ட அவர்’’ வாய்விட்டு சிரித்தேன் என்பதற்காக கூட என் மீது ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

“என்னை எதற்ககாக மன ரீதியாக, உணர்வு ரீதியாக, உடல் ரீதியாக சித்ரவதைக்கு ஆளாக்க வேண்டும்?” என உருக்கமாக கேள்வி எழுப்பிய கங்கனா “இந்த தேசம் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என வலியுறுத்தினார்.

“பெண்கள் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட கற்காலத்தில் நாம் வாழ்கிறாமோ? மற்றவர்களிடம் பேசுவதுக்கூட தவறா ?” என்றும் கங்கனா, இந்தி மொழியில் புலம்பி தீர்த்துள்ளார்.

– பா. பாரதி