Random image

இந்தியா – ஈரான் எண்ணெய் வர்த்தகம்: அமெரிக்கா மவுனம்

டில்லி

ந்தியாவுடனான இரு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் குறித்து அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஆன பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களிடையேயான பேச்சு வார்த்தைகள் நேர்று டில்லியில் நடைபெற்றது.   இந்த பேச்சு வார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராம்ன் ஆகியோரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு தரப்பினரும் கூறி உள்ளனர்.  ஈரான் நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.  தற்போது இந்த சந்திப்பில் அந்த தடை நீடிக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட பிறகு ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.   அத்துடன் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா தெரிவித்தது.

இந்த சந்திப்பில் இந்த தடையை நீக்குவது குறித்து இந்தியா கேட்டுக் கொண்டதற்கு அமெரிக்கா பதில் தெரிவிக்காமல் இருந்துள்ளதால் அந்நாடு ஈரானுடன் இன்னும் பகை எண்ணத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.   அதே நேரத்தில் இந்தியா ரஷ்யா இடையிலான ராணுவ தளவாட கொள்முதல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.