குஜராத் : 10 லட்சம் பேரை சேர்த்தும் முழுமை அடையாத வாக்காளர் பட்டியல்

கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் புதியதாக 10 லட்சம் வாக்காளர்களை சேர்த்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்த போதிலும் இன்னும் பல வாக்காளர்கள் சேர்க்கப்படாமல் உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஏராளமான வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டுள்ள்தாக தெரிவித்தனர்.   அதை ஒட்டி தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 25 ஆம் தேதிவரை புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம் களை நடத்தியது.    இதில் ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்துக் கொண்டனர்.    இது குறித்து குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி முரளி கிருஷ்ணா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார்.

அந்த சந்திப்பில் முரளி கிருஷ்ணா, ”மார்ச் 25 ஆம் தேதி உடன் முடிந்த வாக்காளர்கள் சேர்ப்பு முகாமில் 10,50,407 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன்ர்.  அதன் படி தற்போது 2.34 கோடி ஆண் வாக்காளர்களும், 2.16 கோடி பெண் வாக்காளர்களும் 990 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.  இவர்களில் 10.06 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்” என தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் கோஷ்தி என்பவர் அளித்த பொதுநல வழக்கில், ”கடந்த மாதம் 10 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது புதிய வாக்காளர்கள் சேர்ப்பு வேட்பு மனு பதியும் கடைசி தேதிவரை நடக்கும் என தேர்தல் ஆணையர் அறிவித்தார்.    அதன் படி ஏப்ரல் 4 வரை அதற்கான கால அவகாசம் உள்ளது.

அதனால் பலரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு கொடுத்து காந்துக் கொண்டிருந்தனர்.   இவ்வாறு அகமதாபாத் நகரில் மட்டும் 1.25 லட்சம் பேருக்கு மேல் காத்துக் கொண்டுள்ளனர்.   ஆனால் இவர்களை வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் சேர்க்காததால்  இவர்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தவே மற்றும் பைரன் விஷ்ணு இந்த மனுவை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்குமாறு மனு தாரருக்கு தெரிவித்துள்ளது.   அத்துடன் இந்த மனுவின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.