தசரா விபத்துக்குப் பிறகும் ரெயில் தண்டவாளத்தில் நடந்த திருவிழா

திந்தா

டந்த தசராவின் போது நடந்த ரெயில் விபத்துக்கு பிறகும் கடந்த 13 ஆம் தேதி மற்றொரு திருவிழா தண்டவாளத்தில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் கடந்த மாதம் 19 ஆம் தேதி நவராத்திரியை ஒட்டி ரெயில் பாதை அருகே ஒரு தசரா திருவிழா நடந்தது. அந்த விழா நடந்த மைதானம் தண்டாவாளம் அருகில் இருந்ததால் பலர் தண்டாவாளத்தில் நின்றுக் கொண்டும் அமர்ந்துக் கொண்டும் விழாவைக் கண்டு களித்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதியதில் 61 பேர் மரணமடைந்தனர்..

நாட்டையே உலுக்கிய அந்த சம்பவம் பலருக்கு படிப்பினையை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகங்களும் ஆர்வலர்களும் தெரிவித்தனர். ஆனால் அது தவறு என்பதை பதிந்தா பகுதியில் உள்ள மக்கள் நிரூபித்துள்ளனர்.

நேற்று முன் தினம் வட இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான சாத் பூஜா கொண்டாடப்பட்டது. சூரியனுக்கு நதிக்கரையில் பூஜை செய்வது இந்த விழாவில் முக்கிய அம்சமாகும். அதை ஒட்டி இந்தப் பகுதி மக்கள் கூட்டமாக இங்குள்ள நதியில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாலத்தின் மீத் சென்று தண்டவாளத்தில் நின்றபடி பூஜை செய்தனர்.

ரெயில்வே அதிகாரிகள் அவர்களை தடுத்தும் கேளாமல் இந்த பூஜையை நடத்தி உள்ளனர். இந்த ரெயில் தடத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 12க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்கள் செல்கின்றன. அதனால் ரெயில்வே அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். முன்னெச்சரிக்கையாக ரெயில்களை தாமதப்படுத்தியதால் அசம்பாவிதம் ஏதும்நிகழவில்லை என தெரிய வந்துள்ளது.