அரசு அறிவித்த பிறகும் அம்பத்தூரில் முக கவசமின்றி நடமாடும் மக்கள்

சென்னை

ற்போது சென்னை அம்பத்தூர் மார்கெட் பகுதியில் முக கவசம் அணியாமல் சிலர் நடமாடி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவசியம் இன்றி யாரும் தெருக்களில் நடமாட கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெளியே வருவோர் முகக் கவசம் போன்ற சுய பாதுகாப்பு பொருட்களை அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அம்பத்தூர் மார்கெட் பகுதியில் ஒரு சிலர் நடமாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

அவர்கள் முகக் கவசம் அணியாமல் சென்றுக் கொண்டிருந்துள்ளனர்.

அத்துடன் அவர்களைக் கண்காணிக்கக் காவலர் யாரும் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.