சென்னை

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பலருக்குக் களைப்பு, ருசி மற்றும் வாசனை தெரியாமை, மூட்டு மற்றும் முதுகு வலி தொடர்வதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அகில இந்திய அளவில் இதுவரை சுமார் 7.6 லட்சம் பேர் குணம்டைந்துள்ளன்ர். இதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 1.26 ல்ட்சத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்.  குறிப்பாக சென்னையில் சுமார் 72000 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாகக் குணம் அடைண்டஹ் 13 பேரிடம் ஒரு பிரபல ஊடகம் ஒரு சில கேள்விகளை கேடுள்ளது.  இவர்களில் பெரும்பாலானோருக்குப் பன்முறை நோய் தாக்கம் தென்படவில்லை.  இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆவார்கள்.  இந்த 13 பேரில் ஒரே ஒரு பெண்  இருந்துள்ளார். அவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இவர்களில் யாரையும் குணமடைந்ததற்குப் பிறகு அரசு மருத்துவர்களோ அல்லது சுகாதாரத்துறை அதிகாரிகளோ அல்லது சென்னை மாநகராட்சி அதிகாரிகளோ கண்டுக் கொள்ளவில்லை.   இது குறித்த கணக்கெடுப்பு விரைவில் எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வதுரை தெரிவித்துள்ளார்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சடகோபன் என்னும் 62 வயது முதியவர் தமக்கு எடைக்குறைவும் களைப்பும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  ஆனால் பணி நேரத்தில் மூச்சு விடுவதில் எவ்வித சிரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.   சுமார் 1 மாதம் முன்பு குணமடைந்த 57 வயதான முத்துக் குமார் என்னும் மூத்த பத்திரிகையாளர் தாம் 8 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் வாசம் மற்றும் சுவையை அறிவதில் சிரமம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

40 வயதான அப்துல்ஹமீது என்பவருக்குக் கால்களில் மிகவும் வலி உள்ளதால் அவர் வாகனம் செலுத்துவதை குறைத்துள்ளதாகவும் தமக்கு 5 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே ஊழியரும் நீரிழிவு நோய் உள்ளவருமான அவர் மூட்டு வலி மற்றும் மூச்சுத் திணறல் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

42 வயதான மற்றொரு நோயாளி தமக்கு 20 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் அதில் 5 கிலோ எடை மட்டுமே மீண்டும் கூடியதால் தம்மால் நடக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.