Random image

பிரதமருக்கு எதிரே ஒரு பறவை கூட பறக்காது : கொலை முயற்சி குறித்து சிவசேனா விமர்சனம்

மும்பை

பிரமதருக்கு எதிரே ஒரு பறவையால் கூட பறக்க முடியாமல் இருக்கும் போது அவரை கொல்ல முயற்சி என கூறுவது தவறானது என சிவசேனா தெரிவித்துள்ளது.

அண்மையில் பிரதமரைக் கொல்ல சதி செய்ததாக மகாராஷ்டிராவை சேர்ந்த சிலர் கைது செய்யப்படனர்.   கைது செய்யப்பட்ட அந்த ஐவரையும்  நகர்ப்புற நக்சல்வாதிகள் என பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.  இந்த கைதுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பல சமூக ஆர்வலர்களும் இந்த கைது நடவடிக்கை தவறானது என கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் பாஜகவின் முன்னாள் நட்புக் கட்சியான சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், “மகாராஷ்டிராவில் நகர்ப்புற நக்சலைட்டுகள் என நடந்துள்ள கைதுகள் தவறானவை.   பிரதமருக்கு எதிராக எப்போதும் நக்சலைட்டுகள் சதி செய்யவில்லை.   முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவி இழந்தது மக்கள் ஆதரவு இல்லாததால் தானே தவிர நக்சலைட்டுகள் சதியினால் இல்லை.   

தற்போதுள்ள நிலையில் இந்த அரசை ஜனநாயக முறையில் வெளியேற்ற ஏராளமான வாய்ப்புள்ளது.   இது போல அறிக்கைகளை பூனே நகர காவல்துறையினர் வெளியிடக் கூடாது.

அரசும் இது போன்ற அறிக்கைகளை அனுமதிக்கக் கூடாது.  இது மிகவும் முட்டாள்தனமான அறிக்கை.

நக்சல்வாதிகள் ராஜிவ் காந்தியை கொன்றது போல் மோடியைக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.    பிரதமருக்கு தற்போது உச்ச கட்ட பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.   அவர் யாரையும் அருகில் சென்று சந்திப்பதில்லை.   அவ்வளவு ஏன்?  ஒரு பறவை கூட பிரதமருக்கு எதிரில் பறக்க முடியாது.   அவ்வாறு இருக்க ராஜிவ் காந்தியைக் கொன்றது போல் கொல்ல முயற்சி நடப்பதாக கூறுவது மிகவும் தவறானது” என தலையங்கத்தை அக்கட்சி வெளியிட்டுள்ளது.