‘’சீனாவே, காஷ்மீரை ஆளலாம்’’ பரூக் அப்துல்லா பாய்ச்சல்

‘’சீனாவே, காஷ்மீரை ஆளலாம்’’ பரூக் அப்துல்லா பாய்ச்சல்

ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா , இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,’’ காஷ்மீரில் வாழும் மக்கள் தங்களை இரண்டாம் தரக் குடி,மக்களாகவே உணர்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

‘’காஷ்மீர் மக்கள் தங்களை இந்தியர்களாகக் கருதவில்லை.. அடிமைகளாகவே நினைக்கிறார்கள்’’ என்று குற்றம் சாட்டிய அப்துல்லா’’ இதற்கு, சீனாவின் ஆளுகையில் இருக்கலாம் என நிலைக்கு காஷ்மீரிகள் வந்து விட்டனர்’’ எனப் பரபரப்பு கருத்தை வெளியிட்டார்.

‘’ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக தான் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினேன்.. அப்போது காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என மோடி உறுதி அளித்தார் ’’என பரூக் அப்துல்லா குறிப்பிட்டார்.

‘’காஷ்மீரில் 370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொள்வதாக பா.ஜ.க. கூறுவது உண்மை அல்ல’’ என்று கூறிய அப்துல்லா,’’ அங்கிருந்து பாதுகாப்புப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும்’’ என்று எச்சரித்தார்.

பா.பாரதி