Random image

இலங்கை விமான உணவை நாய் கூட சாப்பிடாது : இலங்கை அதிபர்

கொழும்பு

லங்கை விமானத்தில் வழங்கிய முந்திரியை நாய் கூட சாப்பிடாது என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அதிபர் சிறிசேனா.  இவர் சமீபத்தில் இலங்கையின் விமான நிறுவனமான ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.   நேபாள் தலைநகரான காத்மண்டுவில் இருந்து அவர் ஸ்ரீலங்கா தலைநகரான கொழும்பு நகருக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அந்த விமானத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது.   அதில் முந்திரியும் இடம் பெற்றிருந்தது.    அந்த முந்திரி மிகவும் மோசமான சுவையுடன் இருந்துள்ளது..   அந்த முந்திரியை சாப்பிட்ட சிறிசேனா கடும் கோபம் அடைந்தார்.  உடனடியாக விமான பணி அதிகாரியை அழைத்து இரைச்சல் இட்டார்.

இலங்கை அதிபர் சிறிசேனா, “இந்த முந்திரியின் சுவை மகா மோசமாக உள்ளது.   ஒரு நாய் கூட இதை சாப்பிடாது.   இந்த முந்திரியை கொள்முதல் செய்த அதிகாரி என்னும் விவரம் எனக்கு உடனடியாக வேண்டும்” என கடும் கோபத்துடன் கத்தி உள்ளார்.  இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.   அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “அதிபர் சொன்னதால் எங்கள் உணவுப் பட்டியலில் இருந்து முந்திரியை முழுவதுமாக நீக்கி உள்ளோம்.   முந்திரியை எங்களுக்கு விற்பவர் துபாயை சேர்ந்தவர்.   அவரை மாற்ற உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.