சென்னை:

ப.சிதம்பரத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் அவகாசம் வழங்கியிருந்த நிலையில். அவர் கைது செய்யப்பட்டுள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழகத்தைச் சேர்ந்த  முன்னாள் சிபிஐ அதிகாரி,  இந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை, இதுபோல லோக்கல் போலீஸ்தான் செயல்படுவார்கள் என்று சிபிஐயின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார்.

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் இன்று இரவு சிபிஐ அதிகாரிகளால் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்று கைது செய்யப்பட்ட நிலையில், சிபிஐ-ன் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன், ப.சிதம்பர கைது சிபிஐ அதிகாரிகள் நடந்துகொண்ட விதம்,  இதுவரை என் சர்வீசில் நான் பார்க்காத ஒன்று என்று கடுமையான சாடினார்.

லோக்கல் போலீஸார்தான் இப்படி நடந்துகொள்வார்கள், ஆனால், தற்போது சிபிஐ அதிகாரிகள்  அதுபோல நடந்துள்ளனர், இதை நான் சிபிஐயிடம் நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றும்,  என்னுடைய சிபிஐ சர்வீசில் எத்தனையோ வழக்குகளை பார்த்துள்ளேன் முன் ஜாமீன் வழக்கில் 3 நாள் அவகாசம் என்ற நிலையில் அவரை கைது செய்ய ஏன் இந்த அவசரம்.  இதுபோன்ற நடவடிக்கையை சிபிஐ எந்த காலத்திலும் செய்ததில்லை என்று குற்றம் சாட்டினார்.

முன்னாள் பிரதமர் மறைந்த  இந்திரா காந்தியை கைது செய்தபோதுகூட இப்படி நடந்ததில்லை என்றவர்,  அவரை கைது செய்யும்போது அவருக்கு பெயில் வழங்க சிபிஐ முன்வந்தது, ஆனால் அப்போது அதிகாரிகளை சந்தித்த சஞ்சய்காந்தி,  நீங்கள் வந்தது கைது செய்யத்தானே கைது செய்யுங்கள் என வற்புறுத்தியதால் கைது செய்தோம், ஆனாலும், சிபிஐ நீதிமன்றத்தில் அவரது பெயிலுக்கு ஆட்சேபனை இன்றி அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் ப.சிதம்பரம் மீதான  வழக்கில் 3 நாள் அவகாசம் இருந்த நிலையில் சிபிஐ இவ்வளவு வேகமாக செயல்பட்டு கைது செய்துள்ளது நான் எதிர்பார்க்காத ஒன்று.

இவ்வாறு ரகோத்தமன் கூறினார்.