பிரதமர் மோடியை அமைச்சர்கள், அதிகாரிகள் இனி நெருங்க முடியாது….காரணம் என்ன?

டில்லி:

பிரதமர் மோடிக்கு எந்த நேரமும் உயர் அச்சுறுத்தல் இருப்பதால் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் எஸ்பிஜி அனுமதியின்றி அவரை நெருங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு அதீக அச்சுறுத்தல் மிக்க நபராக உள்ளார். மிக மதிப்புடைய இலக்காக அவர் இருப்பதால் அவர் எந்த நேரமும் அச்சுறுத்தல் உள்ள நபராக கருதப்படுகிறார். அதனால் அமைச்ச்கள், அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் எஸ்பிஜி அனுமதியின்றி அவரை நெருங்க முடியாது என்று மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.

பிரதமரின் நெருங்கிய பாதுகாப்பு குழுவினருக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள் வகுத்து கொடுக்கப்பட் டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் அமைச்சர், அதிகாரிகளையும் உரிய சோதனைக்கு பின்னரே மோடியை ச ந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி பாணியில் மோடியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் மோடி மேற்குவங்கம் சென்ற போது ஒரு நபர் 6 கட்ட பாதுகாப்பை மீறி அவரது கால்களை தொட்டுவிட்டார். இது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதமரின் உயிர் பாதுகாப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபால நுண்ணறிவு பிரிவு இயக்குனர் ராஜீவ் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டார்.

பிரதமரின் பாதுகாப்புக்கு இதர பாதுகாப்பு முகமைகளுடன் கலந்து ஆலோசித்து பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு பிரதமர் மோடி செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed