ந்தூர்

பாஜக ஆட்சி செய்த போது மத்தியப் பிரதேச மாநில அரசுக்கு எதிராக தம்மால் பேச முடியவில்லை என முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் இந்தூர் மக்களவை தொகுதியில் இருந்து 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.    மிக நீண்டகாலம் மக்களவையின் உறுப்பினராகப் பதவி வகித்த பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.   இவர் கடந்த 1969 ஆம் வருடத் தேர்தலில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார்.

கடந்த 2002 முதல் 2004 வரை இவர் மத்திய அமைச்சரவையில் பதவி வகித்துள்ளார்.   சென்ற முறை மக்களவை சபாநாயகராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.    அதன் பிறகு இந்த வருடம் நடந்த தேர்தலில் அவர் போட்டியிட விருப்பம் இல்லை எனத் தெரிவித்துப் போட்டியிடாமல் இருந்தார்.

சுமித்ரா மகாஜன் சமீபத்தில், “சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்த போது என்னால் கூட அரசை எதிர்த்து எதுவும் பேச முடியாத நிலை இருந்தது.  எனவே நான் காங்கிரசைச் சேர்ந்த இந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்களான ஜீது பல்வானி மற்றும் துளசி சிலாவத் மூலமாகப் பிரச்சினைகளை அரசுக்குத் தெரிவிக்கக் கோரிக்கை விடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கே பாஜக அரசை எதிர்த்துப் பேச முடியாத நிலை இருந்ததாக சுமித்ரா மகாஜன தெரிவித்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.