‘லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும்:’ 2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி ‘பஞ்ச்’

சென்னை:

லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும்’ என்று ரஜினி பஞ்ச்’சாக பேசி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஜினி நடிப்பில் உருவாகி உள்ள 2.0 திரைப்படத்தின் டிரைலர் இன்று நண்பகல் வெளியானது.  விழாவில் பேசிய இயக்குனர் ஷங்கர், இதன் தொடர்ச்சியாக 3.0 எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியானது. வரும் 29ந்தேதி படம் திரைக்கு வரு இருக்கிறது.  இன்று சத்யம் காப்ளக்சில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி தனக்கே உரிய பாணியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  “என்னை தாய் தந்தையாக வளர்த்திருக்கும் எனது அண்ணன் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட்  இந்த நிகழ்ச்சிக்கு  வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.  600 கோடி ரூபாய்  முதலீட்டில்  இந்த பிரமாண்ட படத்தை இந்தியாவின் ‘ஸ்பீல் பெர்க்’ இயக்குநர் ஷங்கர் உருவாக்கி உள்ளார்.

இந்த படத்திற்கான இவ்வளவு பெரிய முதலீட்டை படத்திற்காக  தயாரிப்பாளர் செலவிட்டதற்கு காரணம் இயக்குநர் ஷங்கர் மட்டும் தான். இந்த படத்தின் கதையை  முதலில் இயக்குநர் ஷங்கர் என்னிடம் சொன்னார். ஆனால், நான் ஏற்கனவே இரண்டு படங்களில் அவருடன் பணியாற்றியதால் என்னால் இந்தப் படத்தை பண்ண முடியுமா என்று கேட்கவில்லை என்றவர், சிவாஜியின் வெற்றியை எந்திரன் கலெக்ட் செய்ததாக தெரிவித்தார்.

ரோபோ வெற்றியை அடுத்து முதலாவதாக 300 கோடி முதலீட்டில் படத்தை  எடுக்க திட்டமிட்டோம். ஆனால், அது தற்போது இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.600 கோடி அளவில் உருவாகி இருக்கிறது என்று கூறினார்.

மேலும், இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டபோது 14 முதல் 18 கிலோ வரையிலான எடையை கூட்டி தனக்கு  மேக்கப் போடப்பட்டது. அதை உடல் தாங்காது… என்னால் முடியவில்லை என்று கூறிவிட்டேன். படத்தில் நடிக்க வாங்கிய பணத்தை திரும்ப தருவதாகவும்  இயக்குநர் ஷங்கரிடம் கூறிவிட்டேன்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர்,  இந்த படத்திற்காக 4 வருடங்கள் கூட எடுத்துக் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி என்னை மீண்டும் நடிக்க வைத்தார். அவரைப்போல நல்ல நண்பர் கிடைப்பது அரிது. அவர் ஒரு ஹோகினூர் வைரம்.

இந்தப் படம் எப்போது வரும்? வருமா என்று சிலர் கேட்டனர் ஆனால் லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும் என்று கூறியவர்…  நான் படத்தைத் தான் கூறினேன் என்று பஞ்ச் வைத்தார். தற்போது  வந்தாச்சு, வெற்றி உறுதியாகிடுச்சு, ஹிட்டாக்க வேண்டியது தான் பாக்கி, மக்கள் முடிவு பண்ணிட்டாங்க. ஹிட்டாகிடும்” .

இவ்வாறு ரஜினி பேசினார்.

ரஜினியின் பஞ்ச் பேச்சு… விழாவில் வந்தவர்களிடையே பரபரப்பை எற்படுத்தியது. தனது அரசியல் குறித்து ரஜினி பேசியிருப்பதாக கூறப்பட்டது.