💥நெல்லை பாளையாங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான காப்பீட்டு கழக ஊழியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் கோட்டமும் பெண்கள் பிரிவில் சென்னை கோட்டமும் முதல் இடம் பிடித்தன.
💥இந்திய சுதந்திரத்திற்கு ஆங்கிலேயனை எதிர்த்து முதல் குரல் கொடுத்த நம் தமிழர் மாமன்னா் பூலித்தேவரின்  301 வது பிறந்த நாள் வருகின்ற செப்டம்பா் 1 கொண்டப்படுகிறது   விழா மற்றும்  ஒரு தமிழரின் வரலாற்றை உலகறிய செய்துகாட்டுவேன் என்று  நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவா் டாக்டர்  மகாராஜன் அவா்கள்  இப்போது இருந்தே அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்
💥நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரயிலில் அடிபட்டு  மாரியப்பன் என்பவர் பலி, ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது,தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டாரா என  நாகர் கோவில் போலீசார் விசாரணை.
ஆதார்
💥மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு கூறியபோதிலும், அதிலும் ஒரு இழுவையை சேர்த்துள்ளது. காஸ் மற்றும் ரேஷன் பொருட்கள் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்க உத்தரவிட்ட மத்திய அரசு, ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.
💥 டெல்லி: உலகிலேயே முதல் முறையாக கை ரேகை, கண் விழித்திரை அடையாளத்தை வைத்து அனைத்து வகை அரசு சேவைகளையும் பெறும் வசதி இந்தியாவில் விரைவில் வர உள்ளது. இதற்கு ஸ்மார்ட்போன்கள் பக்க பலமாக நிற்க உள்ளன. ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பூஷன் பாண்டே, நேற்று டெல்லியில் நடத்திய முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றில், இந்த திட்டத்திற்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆப்பிள், சாம்சங், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவன உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
💥அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நேற்று அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
💥 புனேவில் கட்டுமான கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
💥ஆகாயதாமரை ஆக்கிரமிப்பால் அழிந்து வரும் பெரியகண்மாய் வேதனையில் விவசாயிகள். அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் நல்ல மழை பெய்தும் கண்மாய்க்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்
💥அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். மணியன் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க திமுக கோரியதை தனபால் நிராகரித்துள்ளார். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் தென்னரசு, செல்லப்பா பேச்சையும் நீக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
r.s bharathy
💥நடை மேம்பாலம் அமைக்க திமுக எம்.பி. ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னை ஆலந்தூர் ஆசர்கானா சந்திப்பில் நடைமேம்பாலம் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளார். மெட்ரோ ரயில் நிலையத்தையும் ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தையும் இணைக்க நகரும் படிக்கட்டு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
💥சென்னையில் இருந்து டெல்லி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எந்திரக் கோளாறு இருப்பது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 6.25 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. 117பயணிகளும், 5 விமானிகளும் இருந்த நிலையில் விமானம் ஓடுபாதைக்குக் கொண்டுவரப்பட்டபோது, விமானத்தில் எந்திரக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.  இது குறித்து விமான நிலையக் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, விமானம் ஓடுபாதையில் இருந்து நிறுத்தும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. எந்திரக் கோளாறைச் சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏர் இந்தியளா
💥 டில்லியில் கேரள முதல்வர் பினரயி விஜயன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, குளச்சல் துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தில் குளச்சல் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தங்களின் எதிர்ப்பை பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிடுவதற்காக கேளர முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு இன்று டில்லி சென்றது. இக்குழுவில் அம்மாநிலத் துறைமுகத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி.,க்கள் சி.பி. நாராயணன், சுரேஷ் கோபி, பி. கருணாகரன், சசி தரூர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் குளச்சல் துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த துறைமுகத்தால், விழிஞ்சம் துறைமுகத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறினர்.
💥சோழவந்தான் : சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் முதற்கட்ட பணிக்காக ரயில்வே கேட் நேற்று நிரந்தரமாக மூடப்பட்டது. இதற்கான மாற்றுப்பாதை குண்டும், குழீயுமாக உள்ளதால் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.
💥சென்னை: அவினாசி-அத்திக்கடவு திட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிடப்பில் இருக்கும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி கோவையை சேர்ந்த ஓதிசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
💥மதுரை: மதுரை திருமங்கலம் – மாட்டுத்தாவணி சென்ற மாநகர அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து என்ஜினில் தீப்பிடித்ததை பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
💥சென்னை: கத்தார் நாட்டில் தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்திய அரசு சார்பில் தமிழக அரசு கத்தார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது
💥30 கோடி ஆண்டு பழமை வாய்ந்த திருகாணி கண்டுபிடிப்பு! 2002 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் வரலாற்றுக்கு முந்தைய நாகரிகத்திற்கான ஆதாரமாக இருக்கலாம் எனச் சீன செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு தெய்தி தொகுப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று கிடைக்கப்பெறும் மர்ம பொருள்கள் பல்வேறு பழமை வாய்ந்த நாகரீகத்தின் ஆதாரமாக இருப்பதோடு அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் மற்றும் இதர கருவிகள் குறித்துப் பலத்த சந்தேகங்களையும் எழுப்புகின்றது.
லான்ஸ்ஹௌ திருகாணியும் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் என்பதோடு, இது பல்வேறு வரலாறு மற்றும் தொல்லியல் துறைக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த மர்ம பொருள் இன்று வரை பல்வேறு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் சிறிய கல் மற்றும் உலோகத்திலான திருகாணி ஆகும். 6*8 செ.மீ அளவில் சுமார் 466 கிராம் எடை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
💥புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகனம் வாடகைக்கு விட போக்குவரத்து துறை அனுமதி அளித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பைக்கை வாடகைக்கு விடும் அனுமதியை ரத்து செய்யவும் ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சராம்தாஸ்
💥மயக்கத்தில் மாணவர்கள் – எங்கே போகிறது தமிழகம்? : ராமதாஸ் பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கையில், ”தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால், மது ஆதிக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பள்ளிக்கூடங்கள் படிப்படியாக குடிப்பகங்களாக மாறுவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன.
💥கோவையில் மீண்டும் ஒரு யானை ரயில் மோதி பலி!  கோவை அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், படுகாயமடைந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளது.
💥குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவம்: விருதைத் திருப்பியளித்தார் தலித் எழுத்தாளர். குஜராத் மாநிலம், உனா நகரில் கடந்த 11-ஆம் தேதி தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநில அரசு வழங்கிய விருதை தலித் எழுத்தாளர் அம்ருத்லால் மக்வானா திருப்பியளித்தார்.
💥மஞ்சள் நிறத்தில் மின்னும் எல்.ஐ.சி! சென்னையோட அடையாளங்கள்ல ஒன்னு எல்.ஐ.சி கட்டடம். அந்த எல்.ஐ.சி. கட்டடத்தோட அடையாளம் ப்ளூ கலர். ஆனா இப்போ கெட்டப் சேஞ்சாகி பளிச்சுனு லைட் மஞ்சள் கலருக்கு மாறி மின்னுது எல்.ஐ.சி. இந்த திடீர் சேஞ் ஓவர்க்கு என்ன காரணம்னு விசாரிக்கையில், ”லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவோட 60ஆம் ஆண்டு கொண்டாட்டம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படுது. அதை முன்னிட்டு இந்தியாவுல உள்ள அனைத்து எல்.ஐ.சியின் கட்டடத்திற்கும் வெள்ளையடிக்கப்படுது” என்றார்,
💥புதுடெல்லி: நாடு முழுவதும் 1 லட்சம் வங்கிகள் இயங்கவில்லை என சம்மேளன தலைவர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். வேலைநிறுத்த போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளதாகவும் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
💥ஓசியில் புரோட்டா கொடுக்க மறுத்த ஓட்டல் ஊழியரை தாக்கிய காவலர்கள் 2 பேர் தற்காலிக நீக்கம் மதுரை: மதுரை: மதுரை கூடல்புதூரில் ஓட்டல் ஊழியர்களை தாக்கிய காவலர்கள் 2 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
💥வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிவு. மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 232.10 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.06 புள்ளிகள் சரிந்து 28,132.56 புள்ளிகளாக உள்ளது. வங்கி, தொழில்நுட்பம், ஐடி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எப்எம்சிஜி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.29% வரை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.30 புள்ளிகள் குறைந்து 8,643.00 புள்ளிகளாக உள்ளது.
 
💥தமிழகத்தில் அச்சத்திலேயே மக்கள் வாழும் நிலையை தமிழக அரசு அகற்ற வேண்டும் என பாரதிய ஜனதா மாநில செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். பெரம்பலூரில் துவங்கும் கட்சியின் 2 நாள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்க சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மறுத்த அவர், கொலை மற்றும் கொள்ளை குறித்த புள்ளி விவரங்களை குறைத்து கூறுவதால் அவற்றை நியாயப்படுத்த முடியாது என்றார்.
💥சென்னை: 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட குரூப்-1 தேர்வுக்கான நேர்காணல் ஆகஸ்ட் 9 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என சென்னையில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
💥கேஜரிவாலுக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம். பிரதமர் நரேந்திர மோடி குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்வைத்த விமர்சனங்கள் தரம் தாழ்ந்தவை என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
💥எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் மதிப்பு தருவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.சட்டசபையில் நேற்று அமைச்சர் ஒ.எஸ். மணியன் பேசியது நீக்கப்படாததை கண்டித்து, நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தின் பட்ஜெட் தொடர்பான பதிலுரையை புறக்கணித்து, தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
💥 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்!
💥நேபாளத்தில் பனிச்சரிவு: தவிக்கும் 7 தமிழர்கள்! நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோவிலுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 7 பக்தர்கள் சமீபத்தில் சென்றனர். ஆன்மீகச் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்கள் திடீரென ஒரு பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். உணவு, தண்ணீர் இன்றி தவித்து வரும் 7 தமிழர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!
💥பெங்களூருவில் விடிய விடியக் கொட்டிய மழை பெங்களூருவில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதனால் பல சாலைகளில் வெள்ள நீர் தேக்கம்; போக்குவரத்து கடும் பாதிப்பு. தாழ்வான பகுதிகளில் புகுந்த நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்!
💥மோடிக்குக் குறி: உளவுத் துறை எச்சரிக்கை! வரும் சுதந்தர தினக் கொண்டாட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து அதிகம் என எச்சரிக்கை. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் பாதுகாப்பு ஏஜென்சிக்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டில் நின்று மோடி சுதந்தர தின உரையை ஆற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது!
💥திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: பாதிரியார் உள்பட 4 பேர் பலி. கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 150-வது ஆண்டு திருவிழா ஆகஸ்டு 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடக்கிறது. முன்னதாக நாளை மறுநாள் (31-ந் தேதி) கொடியேற்றம் நடைபெறுகிறது.திருவிழாவுக்கு பட்டாசு ஆர்டர் கொடுப்பதற்காக காரில் சிவகாசிக்கு ஆலயத்தின் உதவி பங்கு தந்தை அருளப்பன் உள்பட 4 பேர் சென்றனர்.ஆர்டர் கொடுத்த 4 பேரும் அங்கிருந்து இன்று அதிகாலை கொடைக்கானல் திரும்பி கொண்டிருந்தனர். காரை மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த மார்க்  என்பவர் ஓட்டினார்.இந்த கார் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பாண்டியராஜபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள்
தமழ்
💥இளைஞரின் கையை கடித்த காவலர்: விசாரணையின் போது நடந்த கொடூரம். ராமநாதபுரத்தில் விசாரணைக்காக அழைத்து சென்ற இளைஞரின் கையை காவலர் கடித்ததாக புகார் அளிக்கப்பட்‌டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொட்டிகுளத்தை சேர்ந்த தனியார் பள்ளியின் ஒட்டுநர் கார்த்திக். வழக்கு ஒன்றில் கையெழுத்துயிடுவதற்காக ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுரேஷ் என்ற காவலர் ‌அவரை விசாரணைக்காக அழைத்து சென்று கொடூரமான முறையில் தாக்கியதாகவும், கடித்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த கார்த்திக்கின் உறவினர்கள் சம்மந்தப்பட்ட காவலர் மீது புகார் கொடுத்துள்ளனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ‌உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
💥கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
💥வி.எச்.பி தலைவர் பிரவீன் தொகாடியாவை பழிவாங்குவதற்காக வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்திய வழக்கில் லஷ்கர் தீவிரவாதி அபு ஜிண்டால் உட்பட 12 பேர் குற்றவாளிகள் என மகாராஷ்டிரா குற்றத் தடுப்பு சட்ட நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
💥காரைக்குடியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு வேலைக்குச் சென்ற பொறியாளர், கடத்தப்பட்டுள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவில் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்
💥சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் பயணிகள் ரயில் ஆத்தூருக்கு நேற்று இரவு 7.50க்கு வந்தது. அது மங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்வதற்காக முதல் பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், 2வது பிளாட்பாரத்திற்கு பதில் முதல் பிளாட்பார பாதையில் வந்தது. இதனால் பயணிகள் அலறினர். ஆனால் 100 அடி தொலைவில் மங்களூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.  மழையினால் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக அந்த ரயிலை முதல் பிளாட்பாரத்திற்கு மெதுவாக கொண்டு வந்தோம் என அதிகாரிகள் தெரிவித்தனரர்.
💥சென்னையில் டாலர், யூரோ தருவதாகக் கூறி ரூ.2.6 கோடியை மோசடி செய்தது தொடர்பான வழக்கில், தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
💥ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியான ஏழாவது நாளில் ரூ 389 கோடியைத் தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
💥பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் வங்கதேசத்துக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
💥ஹிந்துக்களின் மத நம்பிக்கைக்குரிய பசுக்களை பாதுகாப்பதன் மூலம் முஸ்லிம்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் 💥லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்காக பணியாற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஹதூர் அலி (22) என்கிற சையிஃபுல்லாவிடம் தேசியப் புலனாய்வு அமைப்பினர் நேற்று விசாரணை நடத்தினர்.
💥மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வில் 634 மாணவர்கள் முறைகேடு செய்தனர் என்று இரு நபர் அமர்வு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தண்டனை விவரம் மாறுபட்டதாக இருப்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்கலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
💥லக்னோவில் 15 ரூபாய் கடன் பாக்கியை தராததால் கூலித் தொழில் செய்யும் தலித் தம்பதியினரை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
💥விலைவாசியைக் குறைப்பதாக மக்களவைத் தேர்தலின்போது தாம் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றத் தவறிவிட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
💥பாஜக கூட்டணி ஆட்சியில் பணவீக்கம் குறைந்துள்ளது என்றும், பருவமழை நன்கு பொழிய வாய்ப்பிருப்பதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை மேலும் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
💥வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு, 12 அடியாக உயர்த்தி கட்டிய தடுப்பணையில், சுமார் 6 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், தமிழகத்துக்கு நீர் வராததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
💥பாலாற்றின் மற்றொரு துணை ஆறான ஜிங்க் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?-ராமதாஸ்
💥சென்னை அருகே காணாமல்போன ஏ.என். 32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைக்காததால் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என விமானப்படை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
💥தமிழகத்தின் குளச்சல் துறைமுகம் மத்திய அரசின் நிதியுடனும், தனியார் பங்களிப்புடனும் செயல்படுத்தப்பட உள்ளது என மத்தி இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
💥தேக்கம் அடைந்துள்ள சாலை பணிகள், ரத்து செய்யப்படுவது குறித்து அடுத்த பார்லி., கூட்டுத் தொடருக்கு முன் முடிவு செய்யப்படும்-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
💥கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
💥சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை விடியோ எடுக்க, போலீஸாருக்கு அனுமதி அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
💥கத்தாரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
💥தங்கம் விலை சவரனுக்கு ரூ. 48 குறைவு. சென்னை : நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2966 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,720 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,728 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.52.20 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.48,785 உள்ளது.