Random image

40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:

லகளவில் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

இன்று உலகம் முழுவதும் உலக தற்கொலை தடுப்பு தின விழா நடைபெற்ற வருகிறது.  சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு தின விழாவில்  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,  ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர்  என்றும்,  40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் தற்கொலையை தடுப்பதற்காக தற்கொலை காப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

சாதாரண காரணங்களுக்காக கூட தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும்,  தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்வது அதிகளவில் உள்ளது இதன் காரணமாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.