வாஷிங்டன்:

அமெரிக்காவில் வீணாகும் உணவு பொருள், தண்ணீர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு தினமும் 1.50 லட்சம் டன் உணவு பொருளும், 4.20 லட்சம் கோடி காலன் தண்ணீரும் வீணாவது தெரியவந்துள்ளது.

உணவு பொருட்களில் 39% பழம், காய்கறி குப்பை தொட்டிக்கு செல்கிறது. 17% பால் பொருட்கள், 14% இறைச்சி, முட்டை, ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ், நொறுக்கு தீனி பொருட்கள் வீணாகிறது.

2007ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அமெரிக்கர்கள் தினமும் தலா 30% கலோரி சக்தி கொண்ட உணவு பொருட்களை வீணாக்குது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு அமெரிக்கர் தினமும் சராசரியாக 422 கிராம் உணவை வீணாக குப்பையில் கொட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.