அனைவருக்கும் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன்… டிடிவி தினகரன்

சென்னை:

கொரோனா தடுப்பு பணியின்போது கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன் என்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்து உள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணி அளவில் காலமானார்.

இந்த நிலையில் ஜெ.அன்பழகன் இறப்புக்கு  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் .

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது.

கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன்.

அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.