டிஜிட்டல் பேனர்களை ஒழிக்கனும்னு எல்லோரும் குரல் கொடுக்கிறார்களே! உரிமையாளரின் வேதனை

சேலம்:

சென்னை சுபஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து, டிஜிட்டல் பேனர்களை ஒழிக்கனும்னு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட  எல்லோரும் குரல்கொடுக்கிறார்களே, எங்களின் பேனர் நிறுவன உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் பதிவிட்டிருப்பதாவது,

டிஜிட்டல் பேனர்களை ஒழிக்கனும்னு எல்லோருடைய அறிக்கைகளும் பார்க்கும்போது வேதனை யாக இருக்கிறது.

மக்கள் நலனுக்காக இந்த அறிக்கைகளை வெளியிடும் அனைவருக்குமே இந்த தொழிலில் உழைக் கும் லட்ச கணக்கானவர்களும் மக்கள் தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு தொழிலை நிரந்தரமாக நீங்கள் அழிக்க நினைக்கும்போது அதையே வாழ்வாதாரமாக கொண்டி ருக்கும் எங்களை போன்றோரையும் சேர்ந்து அழிக்கிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தங்கை சுபஸ்ரீ – ன் மரணம் நிகழ்ந்து இருக்க கூடாது… அதில் பொறுப்பற்று முறையாக செய்யாத வர்களை கண்டிப்பதில் நாங்களும் துணை நிற்போம்… அனால் இந்த ஒரு மரணத்தை கவனத்தில் வைத்து இந்த தொழிலை நம்பி வாழும் லட்சக்கணவர்களையும் மரணத்தின் எல்லைக்கு அனுப்புவது முறையற்றது…

விபத்து நிகழ்வதின் சாராம்சத்தை சரி செய்ய வேண்டும் என்றால் பேனர் வைப்பதை முறைப் படுத்த சொல்லுங்கள். ஒரு ஊரில் எந்த எந்த இடங்களில் வைக்கலாம் என்பதற்கு அனுமதி அளிக்க சொல்லுங்கள். முறைப்படி அளவில் வைக்க சொல்லுங்கள்.. பாதுக்காப்பாக வைக்க சொல் லுங்கள்… அனுமதி பெற இணையவழி சேவை கூட கொடுக்க சொல்லுங்கள். நாங்களும் அதற்கு முழு ஒத்துழைப்பும் தருகிறோம்…

அரசு பள்ளி குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற சூர்யா அவர்களின் வார்த்தைகளை அன்போடு வரவேற்கிறேன். கல்விக்கான உங்களது அனைத்து சேவைகளையும் நெகிழ்ந்து பார்க்கிறேன். அனால் அதற்கு எங்களின் தொழிலை அழித்து தான் செய்ய வேண்டியது இல்லை. திரைப்படங்கள் பார்க்க கூட ஒரு குடும்பம் வாரம் 1000-2000 செலவு செய்கிறது. அதைக்கூட பயன்படுத்தலாம். திரைப்படங்கள் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம் கூட இல்லையே. ஆனால் அப்படி ஒரு தொழிலை கொலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

விபத்துகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த வருடம் கூட அதிவேகத்தில் இடது புறம் செல்ல வேண்டிய அரசு பேருந்து வந்த அதே வேகத்தில் வலது புறம் ஏறி எங்களின் தம்பி மற்றும் அலுவகத்தில் வேலை செய்த தம்பியின் கால்கள் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே நடக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளியது. அதன் வேதனையை இன்றுவரை அனுபவித்து வருகிறோம். அதற்காக அரசு பேருந்துகளையே தடை செய்ய சொல்ல முடியுமா அல்லது சென்டர் டிவிடெர் இல்லாத அரசு சாலைகளை தடை செய்ய சொல்ல முடியுமா…

மதுவினால் ஏற்படும் விபத்துகளுக்காக மதுக்கடைகளை முற்றிலுமாக நீக்க இயலுமா…?

ஒரு அறிக்கையை வெளியிடும் முன் அதன் பின் உள்ளவர்களின் வாழ்வாதாரங்களையும் யோசியுங்கள்… உங்கள் அனைவர் மீதும் மரியாதையை வைத்து உங்களை தாங்கும் ரசிகர்களும் இதில் இருக்கிறார்கள். உங்களது படம் பர்ஸ்ட் லுக் மட்டும் நீங்கள் வெளியிட்டாலும் அதை பல்வேறு விதமாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி வடிவமைத்து விளம்பரம் செய்வது எல்லாம் இந்த தொழிலை நம்பி இருக்கும் டிசைனர்கள் தான் … எந்த எதிர்பார்ப்பும் இன்றி உங்களுக்காக நிற்போரை உதாசீனம் செய்யாதீர்கள்…

நன்றி.