ஜெய்பூர்: 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று துவங்கியது. ராஜஸ்தானில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த நாளுக்காக தான் அனைவரும் காத்திருந்தோம். கடைசியில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ராஜஸ்தானில் 167 மையங்களில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அடுத்த 6 மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதுவரை அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்று கூறினார்.