தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு

பாங்காக்:

தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற கால்பந்து அணி சிறுவர்கள் 12 பேரும், அவர்களது பயிற்சியாளரும் பயங்கரமான குகைக்குமக சிக்கினர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்கள் அங்கேயே சிக்கி தவித்து வந்தனர். அதிநவீன ஆயுதங்களும் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி ஒருவர் பின் ஒருவராக மீட்டு வந்தனர்.

முதலில் 3 மாணவர்கள், மறுநாள் 4 மாணவர்களும் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இன்று அனைத்து மாணவர்களையும், பயிற்சியாளரையும் மீட்கும் பணி நடந்தது. முதலில் 4 மாணவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் இறுதியாக பயிற்சியாளரும், ஒரு மாணவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து மீட்பு பணி முடிவுக்கு வந்தது.மீட்பு குழுவினருக்கு உலகளவில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. சிறுவர்கள் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டதால் அவர்களது பெற்றோர், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.