புதுடெல்லி:

இந்தியா 9 முறை எல்லை தாண்டியுள்ளதை நாங்கள் அறிவோம் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.


பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு சேவை வெளியிட்ட செய்திக் குறிப்பில், செப்டம்பர் 28-29 தேதிகளில் எல்லை தாண்டி துல்லிய தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறுகிறது.

அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. அதுபோன்று தாக்குதல் நடத்த நாங்கள் விடமாட்டோம்.
கடந்த 1998-2013 வரை 9 முறை  இந்தியா எல்லை  தாண்டியதை நாங்கள் அறிவோம். இது குறித்து ஐநாவிலும் புகார் கொடுத்துள்ளோம்.

மே 4-ம் தேதி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பண்டாலா கிராமத்தில் 22 காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய ஆயுதப் படையினர் உள்ளனர்.

இவர்கள் எல்லை கடந்து தாக்குதுல் நடத்தியது சந்தேகமின்றி எங்கள் விசாரணையில் நிரூபணம் ஆகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. 22 பேர் படுகொலைக்கு பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தினர் இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளதாக இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.