சென்னை : ஆக்கிரமிப்பு இல்லா இடத்தில் வீடுகளை அகற்ற நோட்டிஸ்

சென்னை

சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியில் உள்ள ஏரிக்கரை தெருவில் ஏரியை ஆக்கிரமிகாத வீடுகளை அகற்ற பொதுப்பணித் துறை நோட்டிஸ் அளித்துள்ளது.

சென்னையில் ஐயப்பன் தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது தண்டலம் செட்டியார் அகரம் ஏரி. இங்குள்ள ஏரிக்கரை தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பல ஏழை மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இடம் கிராம நத்தம் என அறிவிக்கப்பட்ட இடமாகும். ஆகவே இந்த வீடுகள் ஏரிக்கரையில் உள்ள வீடுகளே தவிர ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இல்லை.

இந்நிலையில் தமிழக பொதுப்பணித் துறை இந்த தெருவில் உள்ளவர்கள் வீட்டை உடனடியாக காலி செய்ய நோட்டிஸ் அளித்துள்ளது. ஏரியை பாதுகாக்க இந்த வீடுகளை இட்க்க உள்ளதால் காலி செய்ய வேண்டும் என 64 வீடுகளில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது இந்த பகுதியில் வசிப்போர் தங்கள் வீடு உள்ள பகுதி ஏரியை சேர்ந்தது இல்லை என ஆவணங்களை அளித்துள்ள்னர். ஆனால் அதை கண்டுக் கொள்ளாத பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வீடு காலி செய்ய 3 வாரம் கெடு அளித்துள்ளனர்.

அத்துடன் இங்கு வசிப்பவர்களுக்கும் ஏரிக்கும் இடையில் 15 அடி உயரமுள்ள ஒரு பெரிய சுவர் அமைந்துள்ளது. ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த சுவர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இங்குள்ள மக்கள் அந்த 15 அடி சுவரை மீறி ஏரிக்கு அருகில் செல்லவே முடியாத நிலை உள்ளது. அந்த சுவற்றை ஓட்டியபடி அமைக்கப்பட்டுள்ள சாலை ஏரியை சுற்றி அமைந்துள்ளது. அத்துடன் அந்த ஏரியில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளது.

இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் ஆர்வலர் புகழ்வேந்தன் வெங்கட்ராமன், “பொதுப்பணித்துறை அதிகாரிகல் ஏரியை பதுகாக்க எங்கள் வீடுகளை இடிக்க உள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் அந்த சுவரும் சாலையும் அப்படியே இருக்கும் என தெரிவித்துள்னர். அவ்வளவு பெரிய கான்கிரீட் சுவரை இடிக்காததற்கு நீர் நிலையைக் காக்க இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர். கடந்த 30 வருடங்களாக இந்த மருத்துவக் கல்லூரி சிறிது சிறிதாக ஏரியில் கட்டிடங்கள் கட்டி வருகின்றது. இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்பதே உணமையாகும்” என தெரிவித்துள்ளார்.

ஏரி எப்படி மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பட்டுக்குள் வந்ததுஎன்பது குறித்தும் இங்குள்ளவர்களை காலி செய்வதன் மூலம் ஏரியை எவ்வாறு காக்க முடியும் என கேட்டதற்கு  வருவாய்த்துறை அதிகாரிகளால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. அதிகாரிகளில் ஒருவர், ”இது கிராம நத்தம் என நிச்சயமாக தெரியவில்லை. அப்படி இருந்தால் நிச்சயம் வீடுகள் இடிக்க்கப்பட மாட்டாது” என தெரிவித்துள்ளார்.