சென்னை:

ட்டுக்கு ரூ.5ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறாது என்று கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை என்று கடுமையாக சாடினார்.

அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்றுஆஜரானார். அவருக்கு வழக்கு நகல் வழங்கப்பட்டது. அதையடுத்து வழக்கின் விசாரணை  வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ், ஜெயலலிதா போட்ட அவதூறு  வழக்கையே சந்தித்தவன்,  எடப்பாடி போட்ட வழக்கை சந்திக்க முடியாதா…  கண்டிப்பாக சந்திப்பேன் என்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக் கூறிய அவர், தான் ஈரோடு தொகுதியில் போட்டியிட விரும்பினேன்.. ஆனார், கூட்டணியில் உள்ள மதிமுக அந்த தொகுதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் தனக்கு அந்த தொகுதி தரப்படவில்லை என்றார்.. ஆனால், கட்சி மேலிடம் எந்தத்தொகுதியை ஒதுக்கினாலும் போட்டியிடுவேன் என்றும், ஒதுக்காவிட்டாலும் 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குப் பாடுபடுவேன் என்றார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் முன்கூட்டியே வெளியானது குறித்த கேள்விக்கு,  எச்.ராஜா முந்திரிக்கொட்டை போல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். கட்சி வெளியிடும் பட்டியலில் அவர் பெயர் உள்ளதா என்று பார்போம் என்றும் நக்கலாக கூறினார்.

தற்போதைய தேர்தலை எதிர்நோக்கி உள்ள  அதிமுக தோல்வி பயத்தில் இருப்பதாக கூறியவர்,  ஒரு ஓட்டுக்கு 5000ரூபாய் கொடுத்தால் கூட அவர்களால் வெற்றி பெற முடியாது என்றார். தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ்சும் எடப்பாடியும் அதிமுகவை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.