டில்லி,

விஎம் (Electronic Voting Machine) பிரச்சினை குறித்து வரும் 12ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்தபோது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதியஜனதா வெற்றிபெற்றது.

இதன் காரணமாக மின்னணு ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள்   குற்றம் சாட்டின.

மின்னணு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும், பாரதீய ஜனதாவுக்கு வாக்குகள் விழுந்தன. அதற்கு ஏற்ப ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்யப்பட்டிருந்தன என்று கூறியிருந்தன.

ஆனால், தேர்தல் கமிஷனோ இவிம்-ல் முறைகேடு செய்ய முடியாது என்றும், முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள் என்று கூறியிருந்தது.

இதற்கிடையில்,  மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சிக்ள  வழக்குகள் தொடர்ந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 6 தொகுதிகளின் மின்னணு எந்திரங்களை பறிமுதல் செய்து பலத்த பாதுகாப்புடன் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒப்புகைச்சீட்டு (VVPAT) இயந்திரம்

இந்நிலையில் மின்னணு எந்திரங்கள் மீதான சந்தேகமும், பிரச்சினைகளும் அதிகரித்து வருவதால் இதுகுறித்து அனைத்துகட்சித் தலைவர்களையும் அழைத்து பேச தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து  வரும் 12-ந்தேதி அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த கூட்டத்தில் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி விரிவான ஆலோசனை நடத்தப்படும் என்ற கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2019ம் ஆண்டு நடைபெற இருக்கிற பாராளுமன்ற பொது தேர்தலில் போது, “யாருக்கு வாக்களித்தோம்?” என்பதைத் தெரிந்து கொள்ள ஒப்புகைச்சீட்டு வழங்கும் விவிபிஏறி (VVPAT) இயந்திரம்  ஏற்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த வசதியை செய்வதற்காக தேர்தல் கமிஷனுக்கு கடந்த மாதம் மத்திய அரசு ரூ.3173.47 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.