டில்லி:

குஜராத் சட்டமன்ற தேர்தல் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் மூலம் நடத்தப்படும் என்று உ ச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரத்தை முழுமையாக பயன்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடந்தது. அப்போது குஜராத் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் வகையிலான வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும்.

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தயாரிப்பாளரிடம் இருந்து 73 ஆயிரத்து 500 எந்திரங்கள் பெற்றவுடன் இவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தேர்தல் கமிஷன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள குஜராத் தேர்தலுக்கு 70 ஆயிரம் எந்திரங்கள் தேவைப்படும். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இதில் 48 ஆயிரம் எந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. மீதமுள்ள 25 ஆயிரத்து 500 எந்திரங்கள் செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.