உருவாகிறது முத்துக்குமரன் இயக்கத்தில் ‘தர்மபிரபு 2’:…!

2019-ம் ஆண்டு முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம் ‘தர்மபிரபு’. இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ‘தர்மபிரபு’ படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக இயக்குநர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதைக்களம் தொடர்பாக யோகி பாபுவிடமும் பேசியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முழுக்கதையையும் முடித்து, தயாரிப்பாளர் முடிவானவுடன் ‘தர்மபிரபு 2’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.