இன்று:  ஈ.வெ.ரா. பெரியார் ஆன தினம்

பெண்களுக்கு கல்வி சொத்துரிமை போன்றவைகள் அடிப்படை தேவை என்றும் வரதட்சணையை எதிர்த்தும் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தும்… பெண்ணுரிமைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பிய போராடிய.. தனது வாழ்விலும் அவற்றைக் கடைபிடித்த…   ஈ.வெ.ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட பகுத்தறிவு பகலவனுக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது இதே நவம்பர் 13 அன்றுதான். வருடம்..  1938.

அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தருமாம்பாள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றவர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில்தான் பெண்கள் சேர்ந்து, “பெரியார்” என்ற பட்டத்தை அளித்தனர்.

பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்” என்ற புத்தகத்தை ஆண்களும் படிக்கவேண்டும். உங்கள் வாழ்வில் மட்டுமல்ல.. சமுதாயத்திலும் நல் மாற்றங்கள் வரும்.

இதோ… டவுன்லோட் செய்து படியுங்கள்..