பெரியாரின் 140வது பிறந்தநாள்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
சென்னை:
தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு பலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலப் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படம் வைக்கப்பட்டுள்ளது.
அந்த படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மற்றும் பல கட்சி தலைவர்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.