கொஞ்சம் வீட்டை ஆட்டி பார்க்கலாம் என கிளம்பியிருக்கும் சுச்சி….!

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்து கமலிடம் பேசிய வேல்முருகன், ”நானே வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து எவிக்‌ஷன் அறிவிக்கப்பட்டு, போட்டியாளர் ஒருவர் அனுப்பப்படுவது போலவும் காட்டப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் பாடகி சுசித்ரா போட்டியாளர்களில் ஒருவராக இன்று என்ட்ரி ஆகிறார்.

மேலும் உள்ளே வந்த சுசித்ரா, ”இந்த முறை போட்டி கடுமையாக இருக்கிறது. கொஞ்சம் வீட்டை ஆட்டி பார்க்கலாம் என்று இருக்கிறேன். இனிமே ஃபன் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.