பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீடு இந்த வருடம் அமுல் படுத்த பல்கலைக்கழக மானிய ஆணையம் உத்தரவு

சென்னை

இந்த வருடம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கிட்டை அமுல் செய்யப் பல்கலைக்கழக  மானிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 103 ஆம் திருத்தப்படி முன்னேறிய பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு வருட வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாகௌள்வர்கள், 5 ஏக்கருக்கும் குறைவான அளவு விளை நிலம்வைட்டிருப்போர், நகர்ப்புறப்பகுதிகலில் 1000 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புக்களில் வசிப்போர் உள்ளிட்டோருக்குத் தகுதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் ஆகஸ்ட் 16 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையில் இந்த வருடம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இத்டில் தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களும் உள்ளடங்கும். இது குறித்த அறிவிப்பை உடனடியாக அந்தந்த பல்கலைக்கழகங்களின் இணைய தளங்களில் வெளியிட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் தமிழக பல்கலைக் கழகங்களுக்கு கடும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலயங்களிலும் இந்த வருடத்துக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து விட்டது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, “ உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஜூலை 31 ஆம் தேதி உடன் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளது. தற்போது இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி, “இது குறித்து ஆநில அரசாங்கம் முடிவு எடுக்க வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் மானிய ஆணையத்தின் உத்தரவுப்படி செயல்படுகிறது. ஆயினும் நிதி, மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து மாநில அரசின் முடிவை மட்டுமே பல்கலைக்கழகங்கள் பின்பற்ற முடியும்” எனக் கூறி உள்ளார்.

தமிழ்நாடு உயர்கல்வித் துறை மூத்த அதிகாரி ஒருவர், “பொருளாதார நலிவுற்றோருக்கான ஒதுக்கீடு குறித்து அரசு இன்னும் கொள்கை ரீதியான முடிவு எடுக்கவில்லை. எனவே இந்த வருடம் இந்த ஒதுக்கீட்டை அமுல்ப்டுத்த முடியாது. கொள்கை ரீதியான முடிவு எடுக்க நாட்கள் ஆகும். எனவே தற்போது சட்டப் பூர்வமாக இந்த சுற்றறிக்கை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.