முன்னாள் அமெரிக்க அதிபர் மருத்துவமனையில் அனுமதி

ஹூஸ்டன், அமெரிக்கா

மெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச் புஷ் உடல்நலக் குறிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்/

அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் எச் புஷ்.   இவருக்கு வயது 93.  சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை இவர் மனைவி பார்பரா புஷ் மரணம் அடைந்தார்.    இவர்களுக்கு நீண்ட காலம் வாழ்ந்த அமெரிக்க அதிபர் தம்பதி என்னும் பெருமை உண்டு.  இவர்களது மகன் ஜார்ஜ் டபுள்யூ புஷ் அதிபராக பதவி வகித்துள்ளார்.

தற்போது ஜார்ஜ் எச் புஷ் சுக்கு ரத்தத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதனால் அவர் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.