கேரளா நிவாரணப் பணி: தவறான தகவல் பரப்பிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு

திருவனந்தபுரம்:

கேரளாவில் அரசு மற்றும் ராணுவம் மேற்கொண்டு நிவாரணப் பணிகள் குறித்து பொய் செய்திகளை பரப்பியதாக முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டள்ளது. உன்னி நாயர் என்ற அவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சமூக வலை தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இது வைரலாகியுள்ளது.

ராணுவ உடை அணிந்து கொண்டு தவறான தகவல்களை அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். ராணுவம் மற்றும் அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் என்பது இந்த பேரழிவில் இருந்து மனித இனம் மீள வேண்டும் என்பதற்காக தான்.

இது குறித்து முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில்,‘‘பொய் தகவல்களை பரப்புவோம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பேரழிவில் இருந்து மீற போராடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் முயற்சிகள் அனைத்தையும் கெடுக்கும் வகையில் தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர். சமூக வலை தளத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி கணக்கை சில திருத்தங்கள் செய்து ஓக்கி புயல் நிவாரண நிதி முறையாக பயன்படுத்தவில்லை என்று தகவல் பரப்பப்படுகிறது. ஆனால் இந்த நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.