அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகய் உடல்நிலை மோசம்: பிளாஸ்மா சிகிச்சை

கவுகாத்தி: அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 26ம் தேதி இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, கோகய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு நேற்றிரவு திடீரெனெ உடல்நிலை மோசமடைந்தது. அதன் பின்னர் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

மருத்துவமனையில் தருண் கோகய்  உடன் இருந்தேன். நாளை சட்டசபை கூட்டம் என்பதால் வீடு திரும்பிவிட்டேன். மருத்துவ குழுவினருடன் தொலைபேசியில் தொடர்பில் உள்ளேன் என்று கூறி உள்ளார்.