டில்லி:

2013ம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் அணியை உலுக்கிய ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டை யாரும் மறந்திருக்க முடியாது. இதன் காரணமாக ஸ்ரீநாத், அன்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்னர். 2013ம் ஆண்டு பிப்ரவரியில் நீதிபதி முத்கல், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 13 பேரின் பெயர்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் இந்த 13 பேர் கொண்ட பட்டியலின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் தாகூர், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்டார்.

முறைகேட்டில் ஈடுபட்ட வீரர்கள், நிர்வாகிகளை தண்டிக்க பிசிசிஐ தயாராக உள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும், அவர் கூறுகையில், ‘‘அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பல ஆண்டுகளாக சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். அதனால் அவர்களின் விபரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இமாச்சல் மாநிலம் ஹம்ரிப்பூர் தொகுதி பாஜக எம்.பி.யான தாகூர் தற்போது தேசிய விளையாட்டு நெறிமுறை ஆணைய மசோதாவை தனி நபர் மசோதாவாக எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வர முடிவு செய்துள்ளார். இந்த மசோதா வரும் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவில், விளையாட்டு துறையில் மேட்ச் பிக்சிங், வயது முறைகேடு, பாலியல் தொந்தரவு போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேட்ச் பிக்சிங் போன்ற குற்றங்களில் ஈ டுபடுவோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், வாழ்நாள் தடையும் விதிக்க அந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வயது முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்ப்டடுள்ளது.

மேலும், விளையாட்டு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை எடுத்து விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு கூட்டமைப்பு தனித்தனியே வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டம் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.