கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது

--

பெங்களூரு

நிதி மோசடி வழக்கில் பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பெல்லாரியை சேர்ந்த ரெட்டி சகோதர்கள் சுரங்கத் தொழில், இரும்பு தாது ஏற்றுமதி என பல தொழில்களை செய்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான ஜனார்த்தன் ரெட்டி கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் போது அமைச்சராக இருந்து வந்தார்.

எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்த போது சட்ட விரோதமாக குவாரிகளுக்கு அனுமதி கொடுத்த வழக்கினால் பதவியில் இருந்து விலகினார். அப்போது அதே வழக்கில் ஜனார்தன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

இது தவிர ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக பதவி வகித்த போது பரீத் என்பவ்ர் ஆம்பிடெண்ட் என்னும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். அதிக லாபம் தருவதாக நிறுவனம் ஆசை காட்டியதால் ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் ஒரு சில மாதங்கல் மட்டுமே வட்டித் தொகையை வழங்கிய நிறுவனம் பிறகு பணம் தரவில்லை.

இதனால் பரீத் மீது முதலீடு செய்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.  அமலாக்கப்பிரிவு பரீத் மீது வழக்கு தொடர்ந்தது. இதனால் பரீக் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க அலிகான் என்பவர் மூலம் ஜனார்தன ரெட்டியை அணுகினார். அவ்ர் அதற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். அந்த லஞ்சத்தை அம்பிகா ஜுவல்லர்ஸ் என்னும் நகைக்கடை உரிமையாளர் மூலம் தங்கமாக அளிக்க வேண்டும் என ரெட்டி கேட்டுள்ளார்.

அம்பிகா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ரமேஷ் கோத்தாரி 57 கிலோ நகையை பெல்லாரியில் உள்ள ஒரு பேன்ஸி நகைக்கடை உரிமையாளரிடம் கொடுத்துளார். இந்த விவகாரம் வெளியாகவே பேன்சி நகைக்கடை உரிமையாளர் தம்மிடம் கொடுத்த நகைகளை ரெட்டிக்கு நெருக்கமான அலிகானிடம் கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.

குற்றப்பிரிவு காவல் துறையினர் ஜனார்தன ரெட்டி மீது வழக்கு பதிந்து அவரைக் கைது செய்ய தேடி வந்தனர். அவரை 4 தேடுதல் படைகள் பெங்களூரு, டில்லி, பெல்லாரி மற்றும் ஐதராபாத் நகரங்களில் தெடி வந்தனர். இன்று பெங்களூரு குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜனார்த்தன் ரெட்டியை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவில் அவர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்த உள்ளார்.

You may have missed