மும்பை:

பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நானா படோலே காங்கிரசில் இணைந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா கோண்டியா நாடாளுமன்ற தொகுதி எம்.பி. நானா படோலே சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இருந்தும் விலகினார். மத்திய, மாநில அரசுகளின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளால் இந்த முடிவை எடுத்ததாக அவர் அறிவித்தார்.

இதையடுத்து டில்லியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நானா படோல் சந்தித்தார். அவருக்கு ராகுல்காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மாநில காங்கிரஸ் த¬வைர் அசோக் சவான் கூறுகையில், ‘‘பண்டாரா கோண்டியா இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நானா படோலே வேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முடிவு எடுக்கப்படும்’’என்றார்.

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்த நானா படோலே 2014ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்து பண்டாரா கோண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.