2 பேர் இறந்ததை  பார்ப்பவர்கள் 21 பசுக்கள் இறந்ததை கவனிக்கவில்லை : பாஜக எம் எல் ஏ

னுப்சாகர், உ. பி.

த்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கருத்து உ. பி. யில் கடும் சர்ச்சைய உண்டாக்கி இருக்கிறது.

உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெகர் பகுதியில் ஒரு இறந்த பசுவின் உடல் கிடந்ததை ஒட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   அந்த மறியல்  பெரும் கலவரமாக மாறியது.   கலவரத்தில் காவல் ஆய்வாளர் சுபோத்குமார் சிங் கொல்லப்பட்டார்.  காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த பகுதி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த கலவரத்துக்கு காரணமான பஜ்ரங் தள் தலைவர் யோகேஷ் ராஜ் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்.   அத்துடன் தான் குற்றம் செய்யவில்லை எனக்கூறும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.    இது மாநிலம் எங்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து உத்திரப்பிரதேச முன்னாள் அரசு அதிகாரிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள்.     அதற்கு உத்திரப் பிரதேச மாநில பாஜகவின் அனுப்சாகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் சர்மா பதில் அளித்துள்ளார்.

சஞ்சய் சர்மா, “ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு இளைஞர் ஆகிய இருவர் கொல்லப்ப்பட்டதை மட்டும் முன்னாள் அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.   அதே நேரத்தில் 21 பசுக்கள் கொல்லப்பட்டது குறித்து அவர்கள் கவலி கொள்ளவில்லை.  இந்த கலவரத்தில் உண்மையான குற்றவாளிகள் பசுக்களைக் கொன்றவர்களே ஆவார்கள்.  அவர்களால் தான் வன்முறை ஏற்பட்டுள்ளது” என பதில் அளித்துள்ளார்.

உத்திரப் பிரதேச அரசு பசுக்களின் மீது காட்டும் அக்கறையை மக்கள் மீது காட்டுவதில்லை என மக்களில் பலரும் குறை கூறி வருகின்றனர்.   இந்நிலையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரின் இந்த பதில் மேலும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

You may have missed