ஐதராபாத்:

தேர்தல் நேரத்தில் கார்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த 2004-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை, இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்து நடத்தியவர் கிருஷ்ணமூர்த்தி.

அவரிடம், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நாடு முழுவதும் ரூ. 60 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் எண்ணிக்கை மற்றும் அதிகரிப்பதும் தேர்தல் செலவு அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறிய அவர், தேர்தலில் மக்களிடம் நன்கொடை பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், கார்பரேட் நிறுவனங்களிடம் அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.