வாரணாசி

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் அளித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள்து.

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் தற்போதைய மக்களவை உறுப்பினரும் பிரதமருமான மோடி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டி இடுகிறார். சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி சார்பில் ஷாலினி யாதவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு அக்கூட்டணி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரரான தேஜ் பகதூர் யாதவை வேட்பாளராக அறிவித்தது.

கடந்த 2017 ஆம் வருடம் தேஜ் பகதூர் யாதவ் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு சரி இல்லை என சமூக வலை தளங்களில் வீடியோக்களை பதிந்தார். அப்போது இந்த குற்றச்சாட்டு கடும் சர்ச்சையை உண்டாக்கியது. தேஜ் பகதூர் குற்றச்சாட்டை மறுத்த் அதிகாரிகள் இவர் வீரர்கள் மத்தியில் பொய்த் தகவல் பரப்பி கலகத்தை உண்டாக்க முயற்சித்தாக கூறி பணி நீக்கம் செய்தனர்.

தேஜ் பகதூர் யாதவ் ஏற்கனவே பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். கடந்த மாதம் 24 ஆம் தேதி வாரணாசி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதன் பிறகு சமாஜ்வாதி கட்சி அவரை தங்கள் கூட்டணி வேட்பாளராக அறிவித்தது.

அவருடைய வேட்பு மனு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள்து.

வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேஜ் பகதூர் யாதவ், “கடந்த 24 ஆம் தேதி நான் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தேன். அதன் பிறகு 25 ஆம் தேடி அன்று சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட எனது வேட்புமனுவை அளித்தேன். கடைசி நிமிடத்தில் எனது வேட்பு மனு நிராகரித்து விட்டது. நாட்டின் போலி காவலரான மோடி உண்மை காவலனான என்னைக் கண்டு பயந்துள்ளார். நான் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.