டில்லி:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 2ம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக 2007-ம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றியவர் மாதுரி குப்தா (வயது 61).

இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் -2010ம் ஆண்டு டில்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை டில்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்து மாதுரி குப்தாவை குற்றவாளி என்று நேற்று அறிவித்தது. தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது.

அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார்.