சலுகை கிடையாது ஆனால் விளம்பரத்துக்கு மட்டும் நாங்களா? : விமானப்படை முன்னாள் வீரர்

டில்லி

விமானப்படை வீரர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்காமல் விளம்பரங்களுக்கு மட்டும் பயபடுத்துவதாக முன்னாள் விமானப்படை வீரர் தெரித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த புல்வாமா தாக்குதலை ஒட்டி பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.   அதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் தனது விமானப்படை மூலம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது.   அந்த விமானத்தை விரட்டி வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப் பட்டார்.

உலக நாடுகள் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அவரை விடுதலை செய்தது.   அதை ஒட்டி அபிநந்தன் புகைப்படத்தை பாஜக தேர்தல் விளம்பரங்களில் பயன்படுத்தியது.    இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.   தேர்தல் ஆணையம் இந்திய ராணுவ நடவடிக்கைகள், வீரர்கள் புகைப்படங்கள் மற்றும் சீருடையை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த தடை விதித்தது.

முன்னாள் விமானப்படை தளபதிகளில் ஒருவரான சரத் சவூர், “நன் ஒரு மூத்த ராணுவ வீரன்.  கடந்த அ1965 மற்றும் 1971 ஆம் வருடப் போரில் பங்கு பெற்றுள்ளேன். அதைத் தவிர1987 ஆம் வருடம் நடந்த ஆபரேஷன் பவன், 1991 ஆம் வருடம் நடந்த கார்கில் போர் மற்றும் 2001 ல் நடந்த ஆபரேஷன் பராகிரம் உள்ளிட்ட பல ராணுவ நடவடிக்கைகளில் இடம் பெற்றுள்ளேன்.

ஆயினும் அரசு எங்களுக்கு எவ்வித உதவியும் செய்வதில்லை.  அவ்வளவு ஏன் எங்களது ஏடிஎம் கார்டு மூலம்  3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஸ்டேட் வங்கி அபராதம் விதிக்கிறது.  ஆனால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தேசிய முன்னணி கூட்டணி அரசுக்கு அளிக்கிறது.

அரசியல் தலைவர்கள் விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளிட்ட பல ராணுவ விரர்களின் புகைப்படங்களை  தங்கள் கட்சி போஸ்டர்களில் பயன்படுத்துகின்றனர்.    அதே நேரத்தில் நாட்டில் உள்ள ராணுவத்தினருக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து போரிடுவதாகவும் சொல்லப் படுகிறது.  இதுதான் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ தியாகிகளின் குடும்பங்கள் மற்றும் மூத்த ராணுவத்தினருக்கு அளிக்கும் மரியாதையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.