சரியான மதக்கல்வி பயங்கரவாதத்தை அழிக்கும்  :  முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர்

டில்லி

மதக் கல்வி சரியாக இருந்தால் அது பயங்கரவாதத்தை அழிக்கும் என முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் சையத் ஆசிஃப் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய அமீரக கூட்டமைப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.   இதில் முன்னாள் புலனாய்வுத் துறை தலைவர் இப்ராகிம் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   முன்னாள் புலனாய்வுத்துறை இயக்குனரான இப்ரகிம் கடந்த 2015 ஆம் வருடம் சிறப்பு அமைதி தூதராக பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்டவர் ஆவார்.

இப்ராகிம் தனது உரையில் ”ஒருவர் எவ்வளவுக்கு மதவாதியாக இருக்கிறாரோ அவ்வளவு அடிப்படை வாதியாகவும் இருக்கிறார்.   சமீபத்தில்  இங்கிலாந்து பாதுகாப்புத் துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் இது நிரூபிக்கப்பட்டுளது.   அவர்கள் பாகிஸ்தான் ஐ எஸ் தீவிரவாத அமைப்பிலிருந்து வெளியேறியவர்களிடம் பேசியதில் இருந்து அவர்களுக்கு தங்கள் மதக் கோட்பாடுகளைப் பற்றி 90% கூட தெரியவில்லை என்பது புலனாகி உள்ளது.

அவர்களை மதக் கல்வி என்னும் பெயரில் பயங்கரவாதம் குறித்த கல்வி அளித்து பயங்கரவாதிகளாக்கி உள்ளனர்.   இது இந்தியாவில் உள்ள பல மதரசாக்களில் நடைபெறுகிறது.     கடந்த சில வருடங்களில் இவ்வாறு மூளைச் சலவை செய்யப்பட்டு பல இந்திய இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.  அதாவது இந்தியாவில் உள்ள 18 கோடி இஸ்லாமியர்களில் 10.8 கோடி பேர் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து ஐ எஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்களில் 50% பேர் இந்தியர்கள ஆவார்கள்.    அதிலும் 40% பேர் இந்திய கடற்பகுதி மக்கள் ஆவார்கள்.   இவர்கள் அனைவருக்கும் இந்த இயக்கத்தில் சேர தூண்டுகோலாக இருந்தது மதக் கல்வியே ஆகும்.   அதே நேரத்தில் அனைத்து இஸ்லாமியக் கல்வியாளர்களும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் இல்லை.   மதரசாக்களில் சரியான மதக் கல்வி அளிக்கப்பட்டால் அதுவே பயங்கரவாதத்தை அழிக்கும்.

இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகள் மத வித்தியாசத்தை எதிர்க்கின்றன.   அவ்வாறு எதிர்ப்பது ஒருவர் சம்பந்தப்பட்டதலல்.   நாம் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக போராட  அரசியல் சட்டத்தை நாட வேண்டும்.  சவுதி இளவரசரும் சமீபத்தில் பயங்கர வாத ஒழிப்புக்கு அமீரக பாணியை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.   பயங்கர வாத ஒழிப்புக்கு முன்பு அடிப்படை வாதம் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்” என குறிப்பிட்டு உள்ளார்.